அறிவியல் இயக்கம் ஆக்ஸிலியம் கிளை சார்பில் வாசிப்போம் நேசிப்போம் இயக்கம ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 13 டிசம்பர், 2025

அறிவியல் இயக்கம் ஆக்ஸிலியம் கிளை சார்பில் வாசிப்போம் நேசிப்போம் இயக்கம !

அறிவியல் இயக்கம் ஆக்ஸிலியம் கிளை சார்பில் வாசிப்போம் நேசிப்போம் இயக்கம !
வேலூர் ,டிச 13 -

வேலூர் மாவட்டம் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் ஆக்ஸிலியம் கல்லூரி கிளையின் சார்பில் தண்டலம் கிருஷ்ணாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பயிலும் ஒவ்வொருமாணவ மாணவிகளுக்கும் அறிவியல் வெளியீட்டு புத்தகம் வழங்கி வாசிப்போம் நேசிப்போம் என்ற வாசகத்தின் படி அனைவரும் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தினை ஏற்படுத்தினர்.
பள்ளி வளாகத்தில் நடைபெற்ற கிளை மாநாட்டிற்கு மாவட்ட தலைவர் பே.அமுதா தலைமை தாங்கினார். கிளை செயலா ளர் ஆர்.காயத்ரி வரவேற்று பேசினார் பின்னர் செயல்அறிக்கை சமர்பித்து பேசினார்.  மாவட்ட செயலாளர் செ.நா.ஜனார்த்தனன் சிறப்புரையாற்றி னார். வேலூர் கிளையின் துணைத் தலைவர் முத்து.சிலுப்பன், வினாடிவினா போட்டியின் இணை ஒருங்கிணைப் பாளர் க.சுகுமார் ஆகியோர் இணைந்து அறிவியல் செயல் முறைகளையும் சிந்திக்கும் ஆற்றலை ஏற்படுத்தும் அறிவியல் விளையாட்டுகளையும் செய்து காண்பித்தனர்.  ஓய்வுபெற்ற பள்ளிக்கல்வித்துறை அலுவலர் நீதிமணி, காட்பாடி கிளை தலைவர் ஆர்.சுதாகர் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
மாவட்ட துணைத்தலைவர் கே.விஸ்வநாதன் அறிவியல் பரிசோத னைகளை அறிமுகம் செய்து செயல் விளக்கம் அளித்தார்.கிளை செயல்பாட்டு அறிக்கையினை செயலாளர் ரா.காயத்ரி மற்றும் மாணவ பிரதிநிதி காமாட்சி ஆகியோர் மாவட்ட செயலாளர் முனைவர் செ.நா.ஜனார்த்தனனிடம் வழங்கினார் கள். பின்னர் பின்வரும் நிர்வாகிகள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
கிளைத்தலைவராக முனைவர். (சகோதரி) அ.ஜெயசீலி செயலாளராக   ரா.காயத்ரி துணைத் தலைவராக முனைவர். ந.குமாரி மாணவ நிர்வாகி களாக காமாட்சி கன்னிகை, ஹரிதா , எஸ்வந்திரா ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர்.இக்கிளையில் பத்தாண்டு உறுப்பினராக 52 ஆசிரியைகளும் அலுவலர்களும் ஆண்டு உறுப்பினர் களாக - 350 மாணவிகளும் இணைந்துள் ளனர்.முடிவில் துணைத்தலைவர் ந.குமாரி நன்றி கூறினார்.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு. பாக்யராஜ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad