ஏரல் பேரூராட்சி பகுதியில் வடிகால் அமைக்கும் பணி - பொதுமக்கள் வியாபாரிகள் அவதி. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 13 டிசம்பர், 2025

ஏரல் பேரூராட்சி பகுதியில் வடிகால் அமைக்கும் பணி - பொதுமக்கள் வியாபாரிகள் அவதி.

ஏரல் பேரூராட்சி பகுதியில் வடிகால் அமைக்கும் பணி - பொதுமக்கள் வியாபாரிகள் அவதி.

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் முக்கிய வணிக நகரமாக உள்ளது. இப்பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏரல் பேரூராட்சி முழுவதும் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. 

இதனிடையே வடிகால்கள் சரிவர அமைக்கவில்லை எனவும் அதிமுக சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது. இதனிடையே ஏரல் மணிக்கூண்டு பிரதான வணிக பகுதியில் வடிகால்கள் அமைக்கும் பணி அவசரகதியில் நடந்து வருவதால் பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும், போக்குவரத்து செய்ய மிகவும் இடைஞ்சலாக உள்ளது. 

சில இடங்களில் வடிகால் பணிகள் முடிந்தும், மணல், ஜல்லி கற்கள் அகற்றப்படாமல் இருப்பதால் அருகில் உள்ள உணவகங்கள் மற்றும் கடைகளுக்குள் தூசிகள் புகுந்து வியாபாரிகள் அவதிப்படுகின்றனர்.

இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாலும் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர் பேரூராட்சி நிர்வாகம் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து வடிகால் அமைக்கும் பணியை சிறப்பாக முடித்து தர வேண்டுமென கேட்டுக் கொள்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad