நெல்லை வண்ணார்பேட்டையில் பாமக ஆர்ப்பாட்டம்
நெல்லை டிச.12 - சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை வண்ணார்பேட்டையில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு நெல்லை மாவட்ட செயலாளர் ஜீசஸ் ஜான் தலைமை வகித்தார். நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் கதிரவன் ரோச், புறநகர் மாவட்ட தலைவர் கல்லிடை மகாராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நெல்லை மாவட்ட தலைவர் செல்வம் வரவேற்றார். மாநில கலை இலக்கிய அணி செயலாளர் ராவணன் (எ) அரசு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும். வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும். அனைத்து ஜாதியினருக்கும் உரிய இட ஒதுக்கீடு வழங்க வேண்டியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் நெல்லை மாவட்ட வன்னியர் சங்க தலைவர் ராஜ்குமார், பாமக நெல்லை மாவட்ட துணைச் செயலாளர்கள் மீனாட்சி சுந்தரம், மகேஷ், துணைப் பொருளாளர் ஜெபா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக