எட்டயபுரம் மகாகவி பாரதியார் திருவுருவச் சிலைக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் மரியாதை.
மகாகவி பாரதியார் அவர்களின் 144-வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் எட்டயபுரம் மகாகவி பாரதியார் மணிமண்டபத்தில் உள்ள திருவுருவச் சிலைக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன், மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்க்கண்டேயன் ஆகியோர் இன்று 11.12.25 மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்வில் கோவில்பட்டி சார் ஆட்சியர் ஹிமான்ஷூ மங்கல், எட்டயபுரம் பேரூராட்சி தலைவர் ராமலட்சுமி, வட்டாட்சியர் சுபா ஆகியோர் உடன் உள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக