பொதுப்பணித்துறை அமைச்சர் சாலை விரிவாக்க பணியை குத்து விளக்கு ஏற்றி தொடக்கம்!
திருவண்ணாமலை , டிச11 -
திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை மாநகராட்சியில் அவலூர்பேட்டை இருவழிச் சாலையை ரூ.64 கோடி மதிப்பீட்டில் நான்கு வழிச் சாலையாக அகலப்படுத்தும் பணியி னைத் தமிழ்நாடு பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் இன்று குத்துவிளக்கேற்றி, அடிக்கல் நாட்டி, கொடியசைத்துத் துவக்கி வைத்தார். உடன் நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டப் பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளும் சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை செய்தியாளர்
-கலையரசு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக