அரியலூர், டிச. 12 :
அரியலூர் நகராட்சியின் பழைய காந்தி மார்க்கெட் தினசரி சந்தை பல ஆண்டுகளாக பாழடைந்து இருந்ததால், அந்தக் கட்டிடத்தை இடித்து புதிய சந்தை கட்டிடத்தை அமைக்க நகராட்சி நிர்வாக துறை ரூ.2.87 கோடி நிதியை ஒதுக்கியது. இந்த திட்டப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. தமிழக போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் சிவசங்கர் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
நிகழ்வில் அரியலூர் எம்எல்ஏ கு.சின்னப்பா, நகராட்சி தலைவர் சாந்தி கலைவாணன் மற்றும் பலர் கலந்து கொண்டு வாழ்த்துகளை தெரிவித்தனர்.
.jpeg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக