டிச.12-
தூத்துக்குடி அருகே முள்ளக்காடு நேருஜி நகரை சேர்ந்தவர் ரத்தினதுரை (70), அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல், வியாபாரத்தை முடித்துவிட்டு கடையைப் பூட்டிவிட்டுச் சென்றார். அன்று நள்ளிரவில், அடையாளம் தெரியாத நபர்கள் மளிகைக் கடையின் ஷட்டர் பூட்டை ஒரு கம்பியால் உடைத்தனர்.
பூட்டின் ஒரு பகுதி உடைக்கப்பட்டு, மறு பகுதி உடைக்கப்படாததால், அவர்கள் ஷட்டரை வளைத்து, உள்ளே சென்று, பணப்பெட்டியில் வைத்திருந்த 50 பத்து ரூபாய் நாணயங்கள், குளிர்பானங்கள், சிப்ஸ், பிஸ்கட்கள் மற்றும் சுமார் ₹6,000 மதிப்புள்ள பிற பொருட்களைத் திருடி தப்பிச் சென்றனர்.
இந்நிலையில் நேற்று காலை, வழக்கம் போல் ரத்தினதுரை கடையைத் திறக்க வந்தபோது, மளிகைக் கடை உடைக்கப்பட்டு பொருட்கள் திருடப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
மேலும் அவர் அளித்த புகாரின் அடிப்படையில், முத்தையாபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, கடையில் திருடிய அடையாளம் தெரியாத நபர்களைத் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி செய்தியாளர் கணேஷ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக