2025 - உலக மாற்றுத் திறனாளிகளின் தினத்தை முன்னிட்டு பல்வேறு அமைப்பு சார்பில் பொது மருத்துவ முகாம்!
குடியாத்தம் , டிச 12 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஷெப்ளின் சுகாதார ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் தொழுநோய் மையம், கரிகிரி மருத்துவ மனை – குடியாத்தம் கிளினிக் மற்றும்
கிரீன்வே அறக்கட்டளை இணைந்து, 2025 - உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு இலவச மாற்றுத்திறனாளி களுக்கான மருத்துவம் மற்றும் அதிகார மளித்தல் முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாமில், பொது மருத்துவ பரிசோ தனை, தோல், எலும்பியல், கண், பல், உடல் மற்றும் மனநலம் தொடர்பான மருத்துவ ஆலோசனைகள் மேலும் தேவையான மருத்துவ பரிசோதனைகள் வழங்கப்பட்ன அத்துடன், பல தொண்டு நிறுவனங்களின் ஒத்துழைப்போடு, மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி வாய்ப்புகள், வேலை வாய்ப்புகள், போட்டித் தேர்வுத் தயாரிப்பு, விளையாட் டுத் துறையில் பங்கேற்பதற்கான வழிகாட்டுதல்கள் ஆகியவையும்வழங்கப் பட்டது.சிறப்புக்குறிய விதமாக, முகாமில் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான செயற்கை உறுப்புகள், முடநீக்ககருவிகள் போன்ற உதவி உபகரணங்கள் வழங்கு வதற்கான பரிசோதனை செய்து அளவு கள் எடுக்கபட்டது இம்முகாமில், சிறப்பு விருந்தினர்களாக குடியாத்தம் தொகு தியின் சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜயன் அவர்கள், மற்றும் வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி, மாவட்ட தொழுநோய் அலுவலர் Dr. ப்ரீத்தா, மாவட்ட மாற்று திறனாளிகளுக்கான நல அலுவலர் திரு. பாபு, குடியாத்தம் நகராட்சித் தலைவர் செளந்தரராஜன்,
முன்னாள் அரசு வழக்கறிஞர் . கே எம் பூபதி இந்த. நிகழ்வில் பங்கேற்று சிறப்பித்து மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழ்கள், சக்கர நாற்காலிகள், மற்றும் உதவி உபகரணங்கள் வழங்கி னார்கள்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக