திருப்பத்தூர் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் தர்ணா போராட் டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு!
திருப்பத்தூர் , டிச 8 -
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு 36 வது வார்டு திருமால்நகர் பகுதியில் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதாக குற்றச்சாட்டு நோய் தொற்று பரவும் அபாயம் திருப் பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சி க்கு உட்பட்ட 36 வது வார்டு திருமால் நகர் பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக குடிநீருடன் பாதாள சாக்கடை கழிவுநீர் கலந்து வருவதால் அப்பகுதிமக்கள் மிகுந்த அவதி அடைந்து வருகின்றனர்.
மேலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் என அனைவருக்கும் சளி, இருமல், காய்ச் சல் என நோய்தொற்று ஏற்பட்டு அவ்வப் போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
குடிநீரை பயன்படுத்த முடியாத நிலை யில் துர்நாற்றம் வீசுவதாகவும் கூறுகி ன்றனர்.இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை நகராட்சி அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திர மடைந்த அப்பகுதி மக்கள் மற்றும் 36-வது வார்டு கவுன்சிலர் வெற்றி கொண்டான் நகராட்சி அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் இது தொடர்பாக நகராட்சிஆணை யாளர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை யில் ஈடுபட்டு வருகின்றனர். இருந்த போதி லும் இதற்கு நிரந்தரமான தீர்வு கிடைக்கும் வரை நாங்கள் கலைந்து செல்ல மாட்டோம் என கூறி வருவதால் நகராட்சி அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.மேலும் அப்பகுதி மக்கள் இன்று காலை இதனை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்.
மோ.அண்ணாமலை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக