ஏரல் அருகே ஆலடியூர் இன்று இரவு 7 மணி அளவில் தங்கராஜ் என்பவர் வீட்டில் கொலை.
தூத்துக்குடி மாவட்டம் ஏரலை அடுத்த ஆலடியூரை சேர்ந்தவர் தங்கராஜ் நாடார் வயது 78. இவர் துபாயில் நெல்லை சரவணா ஸ்டோர் என்ற பல்பொருள் அங்காடி நடத்தி வருகிறார் .
இவர் சொந்த ஊரில் வீடுகள் கட்டி வாடகைக்கு விடுவது சம்மந்தமாக ஆலடியூருக்கு வந்துள்ளார். இன்று ஆலடியூர் மெயின் ரோட்டில் மூக்காண்டி மற்றும் ஒருவரால் வெட்டிபடுகொலை செய்யப்பட்டார்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில்
துபாயில் தங்கராஜ் கடையில் வேலைபார்த்து வந்த மூக்காண்டியின் மகன் கொரோனா காலத்தில் இறந்து போன காரணத்தினால் உடலை கொண்டு வரமுடியாதநிலையில் அங்கேயே அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
அந்த மரணத்தில் சந்தேகம் கொண்ட மூக்காண்டி கோபத்தில் இருந்துள்ளார். இதன் காரணமாக இந்த கொலை நடந்ததாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மூக்காண்டி மற்றும் உடன் இருந்தவரை ஏரல் போலீசார் தேடி வருகின்றனர்.
ஏரல் செய்தியாளர் சேதுபதி ராஜா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக