திருப்பத்தூரில் மர்ம நபர்கள் வாட்டர் கேனில் பெட்ரோல் நிரப்பி வீடுகளில் போட்டதால் பரபரப்பு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 8 டிசம்பர், 2025

திருப்பத்தூரில் மர்ம நபர்கள் வாட்டர் கேனில் பெட்ரோல் நிரப்பி வீடுகளில் போட்டதால் பரபரப்பு!

திருப்பத்தூரில் மர்ம நபர்கள் வாட்டர் கேனில் பெட்ரோல் நிரப்பி   வீடுகளில் போட்டதால் பரபரப்பு!
திருப்பத்தூர் , டிச 8 -

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த செல்லரப்பட்டி கண்ணாடி காரன் வட்டம் பகுதியை சேர்ந்த தேவன் (வயது 70)என்பவருக்கு மணியம்மாள் என்கிற மனைவியும் ராமதாஸ், செந்தில்குமார் என இரண்டு மகன் உள்ளனர். இதனை யெடுத்து மனைவி மற்றும் மகன்கள் வெளியூரில் உள்ளதால் தேவன் என்பவர் மட்டும் வீட்டினுள் தனியாக வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று இரவு வீட்டினுள் உறங்கி கொண்டு இருந்த போது மர்ம நபர்கள் ஆயில் மற்றும் வாட்டர் பாட்டில்  பெட்ரோல்  நிரப்பி வீட்டினுள்  போட்டுள் ளனர்.பின்னர் ஆயில் மற்றும் பெட்ரோல் பாட்டில்களை மர்ம நபர்கள் விட்டு அங்கிருந்து தப்பி சென்று உள்ளனர்.
பின்னர் இரவு நேரத்தில் வெளிய வந்து பார்த்த முதியவர் தேவன் பெட்ரோல் மற்றும் ஆயில் பாட்டில்களை கண்டு அதிர்ச்சி அடைந்த நிலையில் கந்திலி போலீசாருக்கு தகவல் அளித்து உள்ளார்.
இந்த புகாரின் பேரில் கந்திலி போலீசார் முதியோரை கொலை செய்ய திட்டமா என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை  மேற்கொண்டு வருகின்ற னர்.

செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad