பேர்ணாம்பட்டில் தமிழ்நாடு அறிவியல் இயக்க கிளை மாநாடு புதிய நிர்வாகிகள் தேர்வு – தீர்மானங்கள் நிறைவேற்றம்!
பேர்ணாம்பட்டு ,டிச 19 -
வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கிளை மாநாடு, 17.12.2025 பேர்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது. கிளை தலைவர் கோ. ரவி தலைமை தாங்கினார். மாவட்ட இணை செயலாளர் சி. எப்சி வரவேற்று பேசி னார். மாநாட்டை தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் துளிர் மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் முத்து சிலுப்பன் தொடங்கி வைத்து பேசினார். மாவட்டச் செயலாளர் முனைவர். செ. நா. ஜனார்தனன் சிறப்பு ரை ஆற்றினார்.இவ்வாண்டில் நடை பெற்ற துளிர் வினாடி–வினா போட்டியில் அதிக பள்ளிகளை பங்கேற்கச் செய்து, மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடை யே அறிவியல் இயக்கத்தின் கருத்து களை எடுத்துச் சென்ற சிறந்த கிளை யாக பேர்ணாம்பட்டு வட்டாரத்தை செயல் படுத்தியதற்காக, அதன் செயலாளர் பொன்.வள்ளுவன் மற்றும் பொறுப்பாளர் களின் சிறந்த முயற்சிகளைப் பாராட்டி, மாவட்ட அறிவியல் இயக்கத்தின் சார்பில் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. புதிய நிர்வாகிகள் தேர்வு கிளை மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட னர் . அவர்களை ஐ.இ.எல்.சி. பள்ளி களின் தாளாளர் க. கருணாகரப்பிள்ளை அறிமுகம் செய்து வைத்து பேசினார்.
தலைவராக இர. கயிலைநாதன் செயலா ளராக பொன் வள்ளுவன் துணைத் தலை வர்களாக பொறியாளர் கோ. செல்வக் குமரன்அ. மா. வளர்மதி, கோ. ரவி, த. ரேணுகா பொருளாளராக உ.அ.நஸ்ரின் பேகம், துணைச் செயலாளர்கள்களாக சி. ஜகுர் அஹ்மத், வ. ரவி, சி. எப்சி துளிர் ஒருங்கிணைப்பாளர்களாக ம. பத்ம நாபன், சு. எலிஷா, கேசவன் மற்றும் 17 செயற்குழு உறுப்பினர்கள் தேர்ந் தெடுக் கப்பட்டனர்.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங் கள்
1.குடிநீர் விநியோகம் : பேர்ணாம்பட்டு நகரில் காவிரி கூட்டுக் குடிநீர் தற்போது எட்டு நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே வழங்கப்படுகிறது. அரசு விதிமுறை களின் படி மூன்று நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்பட வேண்டும். எனவே, நகராட்சி நிர்வாகம் உடனடியாக விதி முறைகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.
2.அரசு மருத்துவமனை மேம்பாடு :
போதுமான மருத்துவர்கள் நியமித்து, பேர்ணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு தாலுகா மருத்துவமனை அந்தஸ்து வழங்க வேண்டும்.
3.வடிகால் மற்றும் மழைநீர் பிரச்சனை :
வி. கோட்டா சாலை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய பகுதியில் மழைநீர் தேங்குவதைத் தடுக்கும் வகையில் நிரந்தர தீர்வு காண வேண்டும்.
4.சுற்றுச்சூழல் பாதுகாப்பு :
நெகிழி பயன்பாட்டைத் தடுக்கவும், குப்பையை தரம் பிரித்து சேகரிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவு
என தெரிவித்தனர்
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக