தூத்துக்குடி - திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் சாலை சேதம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 19 டிசம்பர், 2025

தூத்துக்குடி - திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் சாலை சேதம்.

தூத்துக்குடி - திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் சாலை சேதம் 

டிச.19- திருச்செந்தூர்-தூத்துக்குடி இடையேயான ஸ்பிக் நகர் பகுதி நெடுஞ்சாலையில் சாலை பல நாட்களாக சேதமடைந்து காணப்படுகிறது. 

வெள்ளப்பெருக்கு மற்றும் கனமழை காரணமாக சாலை மேலும் மோசமடைந்துள்ளது.

2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், சாலை புதிதாக அமைக்கப்பட்டு, கடந்த 7 மாதங்களில் மீண்டும் சேதமடைந்ததாக மக்கள் புகார்கள் எழுந்தன. 

இவ்வழியே திருச்செந்தூர் பாத யாத்திரை செல்லும் பக்தர்கள் சேதமடைந்த சாலையால் பெரும் சிரமங்களைச் சந்திக்கின்றனர். இதனால் போக்குவரத்து விபத்துகள் அதிகரித்துள்ளனர்.

இதற்கு நெடுஞ்சாலை துறை தகுந்த  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தூத்துக்குடி செய்தியாளர் கணேஷ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad