தூத்துக்குடி அத்திமரப்பட்டி அருகே மொட்டை மாடியில் இருந்து பனை ஓலை வெட்ட முயன்ற பொழுது மரம் வெட்டும் தொழிலாளி பலி. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 8 டிசம்பர், 2025

தூத்துக்குடி அத்திமரப்பட்டி அருகே மொட்டை மாடியில் இருந்து பனை ஓலை வெட்ட முயன்ற பொழுது மரம் வெட்டும் தொழிலாளி பலி.

தூத்துக்குடி அத்திமரப்பட்டி அருகே மொட்டை மாடியில் இருந்து பனை ஓலை வெட்ட முயன்ற பொழுது மரம் வெட்டும் தொழிலாளி பலி 

டிச.8- தூத்துக்குடி மாவட்டம் அத்திமரப்பட்டி பொன்னகரம் தெருவை சேர்ந்த பக்கீல் மகன் முத்துமணி(49) இவருக்கு 3 மகன்கள் 1 மகள் இருப்பதாக தெரிய வந்தது.இவர் உடை மற்றும் மரங்கள் வெட்டும் தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த 3. 12 .2025-ம்தேதி புதன்கிழமை அன்று கார்த்திகை தீப திருநாள் ஒட்டி ஓலை வெட்டுவதற்கு வீட்டின் அருகே பனைமரத்தில் ஏறுவதற்கு வீட்டு மாடியில் ஏரி கம்பியில் அருவாளை கட்டி ஓலை வெட்டிக் கொண்டிருக்கும் பொழுது திடீரென கால் தவறி கீழே உள்ள கழிவறையில் விழுந்து விட்டதாக தெரியவந்தது. மேலும் பலத்த காயங்கள் ஏற்பட்டன. மேலும் அப்பகுதி மக்கள் முத்துமணி என்பவரை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்பொழுது சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இத்தொடர்ந்து முத்தையாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் சண்முக லட்சுமி மற்றும் உதவி ஆய்வாளர் ராமகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி செய்தியாளர் கணேஷ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad