தூத்துக்குடியில் சிபிஐ, விசிக கட்சிகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 8 டிசம்பர், 2025

தூத்துக்குடியில் சிபிஐ, விசிக கட்சிகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

தூத்துக்குடியில் சிபிஐ(எம்) ,சிபிஐ(எம். எல் ) சிபிஐ, விசிக, கட்சிகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகே சிபிஐ(எம்), சிபிஐ, விசிக, சிபிஐ(எம்.எல்) கட்சிகளின் சார்பில் தொழிலாளர் உரிமைகளைப் பறிப்பதாகக் கூறி, மத்திய அரசு கொண்டு வந்த நான்கு புதிய தொழிலாளர் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த‌ ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஆறுமுகம், சிபிஐ மாவட்டச் செயலாளர் கரும்பன், விசிக மாவட்டச் செயலாளர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிபிஐ (எம்)மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத், சிபிஐ(எம்.எல்) மத்தியக்குழு உறுப்பினர் பாலசுந்தரம், விசிக துணை பொதுச்செயலாளர் வழ.வில்லவன் கோதை, சிபிஐ மாவட்ட நிர்வாககுழு உறுப்பினர் லோகநாதன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்.

தூத்துக்குடி செய்தியாளர் கணேஷ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad