தாராபுரம் அருகே பக்தர்கள் சென்ற டெம்போ டிராவலர் கவிழ்ந்து விபத்து – 13 பேர் காயம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 27 ஜனவரி, 2026

தாராபுரம் அருகே பக்தர்கள் சென்ற டெம்போ டிராவலர் கவிழ்ந்து விபத்து – 13 பேர் காயம்.


பழனி கோவிலுக்கு சென்றபோது ஸ்டீரிங் துண்டிப்பு – அலங்கியம் போலீசார் விசாரணை.


திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த தாசநாயக்கன்பட்டி பகுதியில் பக்தர்களை ஏற்றி சென்ற 407 டெம்போ டிராவலர் வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தலைக்குப்புற கவிழ்ந்ததில் 13 பேர் படுகாயம் அடைந்தனர்.


தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அருகே உள்ள மேட்டாங்குறிச்சி பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்கள் சுமார் 23 பேர், திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக வாகனத்தில் பயணம் செய்து வந்தனர். வாகனம் தாசநாயக்கன்பட்டி அருகே சென்றபோது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டில் இருந்த ஸ்டீரிங் திடீரென துண்டானதாக கூறப்படுகிறது. இதனால் வாகனம் சாலையில் நிலைதடுமாறி கவிழ்ந்தது.


இந்த விபத்தில் ஒரு ஆண் மற்றும் 12 பெண்கள் உட்பட 13 பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்களை அங்கிருந்தவர்கள் மற்றும் மீட்புப் படையினர் 108 ஆம்புலன்ஸ் மற்றும் தனியார் வாகனங்கள் மூலம் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


காயமடைந்தவர்களில் பவுன்ராஜ் (42), மோனாலிசா (32), நாகலட்சுமி (33), சித்திரகலா (45), மகேஸ்வரி (51), அபிராமி (27) உள்ளிட்டோர் அடங்குவர்.விபத்து குறித்து தகவல் அறிந்த அலங்கியம் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.


திருப்பூர் மாவட்ட செய்தியாளர் S.ஜாபர்சாதிக்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad