திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 16வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு !
திருப்பத்தூர் , ஜன 24 -
திருப்பத்தூர் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 16வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு விழிப் புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி தலைமையில் நடைபெற்றது. எனது இந்தியா எனது வாக்கு என்ற கருப்பொருளிலும் இந்திய ஜனநாயகத்தின் இதயத்தில் இந்திய குடிமகன் என்ற வாசகத்தின் அடிப்படை யில் 16 வது தேசிய வாக்காளர் தினம் ஜனவரி 25 அன்று கொண்டாடப்பட உள்ளது . அதனடிப்படையில்திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி தலைமையில் நடைபெற்றது. தேசிய மாணவர் படையை சேர்ந்த சுமார் 150 மாணவர்கள் பங்கு பெற்ற , வாக்களிப் பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் கொடி அசைத்து துவக்கி வைத்தார். வாக்களிப் பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் வாசகங்கள் அடங் கிய பதாகைகளை கையில் எழுதிய படி மாணவர்கள் பேரணியில் பங்கு பெற்ற னர். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் துவங்கிய பேரணி தூய நெஞ்ச கல்லூரி வரை சென்று நிறை வடைந்தது. தொடர்ந்து மகளிர் சுய உதவிக் குழு பெண்கள் ஒன்றிணைந்து தேசிய வாக்காளர் தினம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வரைந்த கோலங்களை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து இளம் வாக்காளர்கள் மூத்த வாக்காளர் கள் மூன்றாம் பாலின வாக்காளர்கள் என பல்வேறு தரப்பு வாக்காளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் வாக்காளர் தின உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.
மேலும் இனம் வாக்காளர்கள், 80 வயது அடைந்த மூத்த வாக்காளர்கள் மாற்றுத்தி றனாளிகள் மற்றும் மூன்றாம் பாலின வாக்காளர்களை மாவட்ட ஆட்சியர் சால் வை அணிவித்து மரியாதை செலுத்தி தவறாமல் வாக்களிக்க வலியுறுத்தினார்
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி மற்றும் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பங்கு பெற்றனர்.
மாவட்ட செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக