குடியாத்தம் நகர லயன்ஸ் சங்கம் சார்பில் நடுநிலை பள்ளி மாணவர்களுக்கு ஐடி கார்டு வழங்கும் விழா ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 24 ஜனவரி, 2026

குடியாத்தம் நகர லயன்ஸ் சங்கம் சார்பில் நடுநிலை பள்ளி மாணவர்களுக்கு ஐடி கார்டு வழங்கும் விழா !

குடியாத்தம் நகர லயன்ஸ் சங்கம் சார்பில் நடுநிலை பள்ளி மாணவர்களுக்கு  ஐடி கார்டு வழங்கும் விழா !
குடியாத்தம் ,ஜன 24 -


வேலூர்  மாவட்டம்  குடியாத்தம் நகர லயன்ஸ்  சங்கம் சார்பில் குடியாத்தம் ஒன்றியம் சரகுப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு ஐடி கார்டு  மற்றும் மகிழ் முற்றம் குழுவிற்கு அடையாள அட்டை பேஜ்கள் இலவசமாக வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் குடியாத்தம் நகர லயன்ஸ் சங்கம் தலை வர்  ரவீந்திரன் தலைமை தாங்கினார்
 பரமசிவம் வட்டார கல்வி அதிகாரி  பஞ்சாயத்து தலைவர் ராஜி  முன்னிலை வகித்து சிறப்புரையாற்றினர் இதில் பள்ளியின் தலைமை ஆசிரியை எம்.சித்ரா அனைவரையும் வரவேற்றி னார் நிகழ்வில் குடியாத்தம் நகர லயன் சங்க செயலாளர் கோல்டன் பாபு,  ஜி எல் டி ஒருங்கிணைப்பாளர் பொன்னம்பலம்,  வட்டார தலைவர் பாபு, மாவட்டத் தலைவர் கள் ஜே ஜி நாயுடு, காசி விஸ்வநாதன், சுரேஷ்குமார், லயன்ஸ் சங்க நிர்வாகி வெங்கடேஸ்வரன், பட்டதாரி ஆசிரியர் கள்  இன்பவள்ளி, ரேவதி,  காஞ்சனா,  ரமேஷ் மற்றும்  துரை ஆகியோர் மாணவ மாணவிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டனர்

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad