சாலை பாதுகாப்பு வாரம் முன்னிட்டு வேலூர் - தமிழ்நாடு வட்டாரப் போக்கு வரத்துதுறை மற்றும் தீயணைப்புத் துறை சார்பில் தீ விபத்து குறித்துவிழிப்புணர்வு
வேலூர் , ஜன 24 -
வேலூர் மாவட்டம், வேலூர் தாலுகா, சத்துவாச்சாரி, வேலூர் வட்டார போக்கு வரத்து அலுவலகத்தில் சாலை பாது காப்பு மாதம் முன்னிட்டு அலுவலகத்தில் தீவிபத்து ஏற்பட்டால் எவ்வாறு தடுப்பது குறித்து வேலூர் தீயணைப்பு துறையின ரால் செயல் விளக்கத்தை அளித்தனர். இதில் தீயணைப்பு நிலைய அலுவலர் முருகேசன் முன்னிலையில் வேலூர் வட்டார போக்குவரத்து மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜ்குமார் செயல் விளக்கம் அளித்தார். இதில் போக்குவரத்து துறை சார்ந்த அலுவலர்கள் பணியாளர்கள் மற்றும் தீயணைப்பு பணியாளர்கள், பொதுமக்கள், ஓட்டுநர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக