அச்சுறுத்தும் சுகாதார சீர்கேடு - நடவடிக் கை எடுக்குமா மாநகராட்சி? தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேலூர் மாவட்ட தலைவர் அ.முன்னா கேள்வி ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 24 ஜனவரி, 2026

அச்சுறுத்தும் சுகாதார சீர்கேடு - நடவடிக் கை எடுக்குமா மாநகராட்சி? தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேலூர் மாவட்ட தலைவர் அ.முன்னா கேள்வி !

அச்சுறுத்தும் சுகாதார சீர்கேடு - நடவடிக் கை எடுக்குமா மாநகராட்சி?   தமிழக வாழ்வுரிமைக்  கட்சி  வேலூர்  மாவட்ட தலைவர்  அ.முன்னா கேள்வி !
வேலூர் , ஜன 24 -

வேலூர்  மாவட்டம்  மக்கான்  நகர்  புற ஆரம்ப  சுகாதார  நிலையம்  முன்பு குவிக்கப்பட்டுள்ள குப்பை மற்றும் கழிவு நீர் கால்வாய்  யில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது  இதனால் நோய் தொற்று வராமல்  மற்றும் பொதுமக்கள் முகம் சுழித்துக் கொண்டு செல்கின்றனர்  வேலூர்  சமூக ஆர்வலர் அ.முன்னா வேலூர் மாநகராட்சி க்கு ஒரு கோரிக்கை விடுத்துள்ளார் அதில் வேலூர் மாநகரா ட்சி மேயராக சுஜாதா பொறுப்பேற்ற சில மாதங்களில், வேலூர் மாநகராட்சிக்குட் பட்டபகுதிகளில் பொது இடங்களில் குப்பை கொட்டினால் 500 ரூபாய் அபரா தம் விதிக்கப்படும். கொட்டு பவரை வீடியோ எடுத்து மாநகராட்சிக்கு தெரிவிப் பவருக்கு 200 ரூபாய் அன்பளிப்பு கொடுக் கப்படும்" என்ற அதிரடி அறிவிப்பு ஒன் றை செய்து, பொது இடங்களில் அசுத்தம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இந்த அறிவிப்பு வெறும் அறிவிப்பாகவே உள்ளது. வேலூர் மாநகராட்சி 17 வது வார்டு மக்கான் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் பல இடங்களில் குப்பைகள் குவிக்கப்பட்டு சுகாதார சீர்கேடாக காட்சியளிக்கிறது. இதனால் நோயாளிகள் மருத்துவமனைக்கு வந்து குணம் அடைந்து செல்வதற்கு பதிலாக மேலும் இங்குள்ள சுகாதார சீர்கேடால் நோய் தாக்குதலோடு செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது என்கின்றனர் மேலும் இங்கு பள்ளி உள்ளது.இந்த சுகாதார சீர்க்கேட்டால் துர்நாற்றம் மூக் கை துளைக்கிறது. வாய் குமுட்டுகிறது. மக்கள் பிரதிநிதிகளும், மாநகராட்சி சுகாதார பிரிவு அதிகாரிகரிகளும் பணி யில் உள்ளார்களா என்று சந்தேகம் எழுகிறது. இந்த 17 வது வார்டு முழுவதும் நாய்கள் தொல்லை, சுகாதார சீர்கேடுகள், கொசு தொல்லை உள்ளிட்ட பல்வேறு தொல்லைகளை இந்த வார்டு மக்கள் அனுபவித்து வருகின்றனர். இஸ்லாமிய மக்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட சமூக மக்கள் இருக்கும் பகுதிகளை எல்லாம் குப்பை கிடங்காக மாநகராட்சி நிர்வாகம் மாற்றி வைத்து உள்ளதா என்னவோ என சந்தேகம் எழுகிறது. எனவே இனியாவது சம்பந்தப்பட்ட மாநகராட்சி சுகாதாரப் பிரிவு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கி றேன். இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad