ஆலந்தலை இயேசு வின் திரு இருதய அற்புத கெபி திருத்தலத்தில் 2026ம் ஆண்டின் முதல் வெள்ளி சிறப்பு திருப்பலி. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 9 ஜனவரி, 2026

ஆலந்தலை இயேசு வின் திரு இருதய அற்புத கெபி திருத்தலத்தில் 2026ம் ஆண்டின் முதல் வெள்ளி சிறப்பு திருப்பலி.

ஆலந்தலை இயேசு வின் திரு இருதய அற்புத கெபி திருத்தலத்தில் 2026ம் ஆண்டின் முதல் வெள்ளி சிறப்பு திருப்பலி. ஆயர் ஸ்டீபன் அந்தோணி சிறப்பு மறையுறை வழங்கினார்.

திருச்செந்தூர் ஆலந்தலை இயேசுவின் திரு இருதய அற்புத கெபி திருத்தலத்தில் 2026 ம் ஆண்டின் முதல் வெள்ளியை முன்னிட்டு தூத்துக்குடி மறை மாவட்ட மேதகு ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் ஆயர் ஸ்டீபன் அந்தோணி அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்து தெரிவித்து சிறப்பு மறையுறையை வழங்கினார். 

இதில் திருத்தல அதிபர் சில்வெஸ்டர், உதவி பங்குத்தந்தை டைட்டஸ், மற்றும் அருட்தந்தையர்கள், அருட் சகோதரிகள் உட்பட ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். 

இதற்கான ஏற்பாடுகளை திருத்தல அதிபர் சில்வெஸ்டர், உதவி பங்கு தந்தை டைட்டஸ், மற்றும் திருத்தல நிதி குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர். திருப்பலியில் கலந்து கொண்ட அனைவருக்கும் கோவை - கூட்டபுளியை சேர்ந்த குடும்பத்தினர் சார்பில் அறுசுவை விருந்து அளிக்கப்பட்டது.

தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad