திருப்பூர் 35 வது வார்டில் ரேஷன் பயனாளிகளுக்கு தெற்கு எம்எல்ஏ பொங்கல் பரிசு வழங்கி துவக்கி வைத்தார் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 12 ஜனவரி, 2026

திருப்பூர் 35 வது வார்டில் ரேஷன் பயனாளிகளுக்கு தெற்கு எம்எல்ஏ பொங்கல் பரிசு வழங்கி துவக்கி வைத்தார்



 தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாளை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடும் விதமாக மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின்   அவர்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு

தலா ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு என பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.3000 ரொக்கம் விலையில்லா வேட்டி, சேலைகள் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் திட்டத்தை 

துவக்கி வைத்ததன் தொடர்ச்சியாக,

திருப்பூர் மத்திய மாவட்டம், திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதி, வார்டு எண் 35, வாலிபாளையத்தில் திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினரும் திருப்பூர் மத்திய மாவட்ட திமுக செயலாளருமான க.செல்வராஜ் எம் எல் ஏ  திட்டத்தின் தொடர்ச்சியை துவக்கி வைத்து பொதுமக்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கினர் உடன் தெற்கு மாநகர திமுக செயலாளர் டி கே டி மு. நாகராசன் மாமன்ற உறுப்பினர் முத்துகிருஷ்ணன் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

 செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad