வாணியம்பாடி அருகே மூதாட்டி கழுத்தை நெரித்து மர்ம நபர்கள் கொலை செய்து 4 சவரன் தங்க நகைகளை கொள்ளையடி த்து தப்பி ஓட்டம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 7 ஜனவரி, 2026

வாணியம்பாடி அருகே மூதாட்டி கழுத்தை நெரித்து மர்ம நபர்கள் கொலை செய்து 4 சவரன் தங்க நகைகளை கொள்ளையடி த்து தப்பி ஓட்டம் !

வாணியம்பாடி அருகே மூதாட்டி கழுத்தை நெரித்து மர்ம நபர்கள் கொலை செய்து 4  சவரன் தங்க நகைகளை கொள்ளையடி த்து தப்பி ஓட்டம் !
வாணியம்பாடி, ஜன.7- 

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பெத்தகல்லுபள்ளி பகுதியை சேர்ந்தவர் நடராஜன் மனைவி பவுனம் மாள் (வயது 65). இவர் புத்துக் கோயில் சுங்கச்சாவடி அருகே உள்ள ஏரிக்கரை யோரமாக கொட்டகை அமைத்து மாடு களை மேய்த்து கொண்டு அங்கேயே நீண்ட நாட்களாக சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு புத்துக்கோயில் ஏரிக்கரை பகுதியில் மது பாட்டில்கள் விற்பனையில் ஈடுபட்டிருந்த பவுனம்மாள் என்பவரை‌மர்ம நபர்கள் கழுத்தை நெரித்து, கல்லால் அடித்து கொடூரமாக கொலை செய்து பின்னர் அவர் அணிந்து இருந்த 4  சவரன் தங்க நகைகளை பறித்துக் கொண்டு தம்பியோடியுள்ளனர்.
தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மாவட்ட காவல் கண் காணிப்பாளர் சியாமளா தேவி மற்றும் அம்பலூர் காவல்துறையினர் பிரேதத்தை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து  மூதாட்டி யை  கொலை செய்து விட்டு  நகைகளை பறித்துச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad