தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் நகரை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திருக்கும் உண்மையான தூய்மை தூதர்கள் ஆகிய தூய்மை பணியாளர்களை மரியாதை செய்யும் வகையில், அவர்களுக்கென ஒரு சிறப்பு பாராட்டு விழா நேற்று 06.01.2026 திருமறையூரில் சேகர தலைவர் ஜான் சாமுவேல் தலைமையில் நடைபெற்றது.
மழை, வெயில், சிரமங்கள் எதையும் பொருட்படுத்தாமல் நகரின் நலனுக்காக நாள் தோறும் உழைக்கும் 50-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் மற்றும் மஸ்தூர்கள் இதில் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
சமூகத்தின் கண்களுக்கு பல நேரங்களில் புலப்படாத இவர்களின் அர்ப்பணிப்பு மிக்க சேவையை மதிக்கும் வகையில், அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன், பரிசுகளும் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வு, தூய்மை பணியாளர்களின் உழைப்பை மதித்து மரியாதை செய்ய வேண்டிய நமது பொறுப்பு என்பதை நினைவூட்டும் ஒரு சிறப்பான தருணமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில் சி.எஸ்.ஐ தூத்துக்குடி நாசரேத் திருமண்டல நிர்வாகிகள் மற்றும் திருமறையூர் சேகர அங்கத்தினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக