உங்க கனவ சொல்லுங்க கணக்கெடுப் பில் திருப்பத்தூரில் 736 தன்னார்வலர் களுக்கு அடையாள அட்டை! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 9 ஜனவரி, 2026

உங்க கனவ சொல்லுங்க கணக்கெடுப் பில் திருப்பத்தூரில் 736 தன்னார்வலர் களுக்கு அடையாள அட்டை!

உங்க கனவ சொல்லுங்க கணக்கெடுப் பில் திருப்பத்தூரில் 736 தன்னார்வலர் களுக்கு அடையாள அட்டை!
திருப்பத்தூர் , ஜன 9 -

மாவட்ட ஆட்சியர்,  எம்.எல்.ஏ க்கள் பங்கேற்பு !

திருப்பத்தூர் மாவட்டம், ஆதியூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் உங்க கனவ சொல்லுங்க தொடக்க நிகழ்ச்சி திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி தலைமை யில் நடைபெற்றது. அதில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி, ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ், ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் ஆகிய 3 சட்டமன்ற உறுப்பி னர்கள் கலந்து கொண்டு மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் விஜயகுமாரி. மாவட்ட ஒன்றிய குழு தலைவர் என் கே ஆர் சூர்யா குமார் நாட்றம்பள்ளி ஒன்றிய சேர்மன் வெண்மதி முனிசாமி ஆம்பூர் மேச்சேரி சுரேஷ். திருப்பத்தூர் நகர செய லாளர் எஸ் ராஜேந்திரன். திருப்பத்தூர் நகர மன்ற தலைவர் சங்கீதா வெங்கடே சன்  கந்திலி ஒன்றிய குழு தலைவர் திரு முருகன். ஜோலார்பேட்டை ஒன்றிய குழு தலைவர் சத்யா சதீஷ். கந்திலி ஒன்றிய செயலாளர் முருகேசன் திருப்பத்தூர் மாவட்டத்தில் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு உள்ள 736 தன்னார்வலர்களுக்கு அடையாள அட்டை மற்றும்கணக்கெடுப்பு படிவங்களை வழங்கினர்.

செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad