தனது குழந்தைகளுக்கு ஜாதி மத மற்ற வர் சான்றிதழ் வழங்கிய அரசு அதிகாரி களுக்கு நன்றி தெரிவித்த தந்தை !
ஜோலார்பேட்டை , ஜன 9 -
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த தில்லை நகர் பகுதியில் சேர்ந்த ஹரிதாஸ் மகன் சந்தோஷ் (வயது 35)
இவருக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு சுகன்யா என்ற பெண்ணுடன் திருமணம் ஆகி ரணதிரா வியாஷ்(வயது 7) மற்றும் தேவதிக்ஷ்யா (வயது 6) என ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் என இரண்டு குழந்தைகள் உள்ளன இந்த நிலையில் தனது இரண்டு குழந்தைகளுக்கும் ஜாதி மதம் அற்றவர் என சான்றிதழ் வழங்க வேண்டும் என திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த 2023ஆம் ஆண்டு மனு கொடுத்தார். மேலும் இந்த மனு மீது தாசில்தார் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவே சாதி மதம் மற்றவர் என சான்றிதழ் வழங்க உத்தர விட கோரி சென்னைஉயர்நீதிமன்றத்தில் புகார் மனு அளித்தார்.
அதன் காரணமாக அந்த மனு மீது சென்னை உயர் நீதி மன்றம் மேற் கொண்டு சாதியற்றவர் சான்றிதழ் வழங்கிய நாள் பல பிரச்சனை கள் வர வாய்ப்புள்ளது என அறிவுறுத்தப் பட்டதாக கூறப்பட்ட நிலையில் மேலும் பாராட்டுதல்களையும் தெரிவித்திருந்தது
இந்த நிலையில் பலகட்ட போராட்டத்தி ற்கு பிறகு திருப்பத்தூர் வட்டாட்சியர் நவநீதம் சந்தோஷ் குழந்தைகளுக்கு சாதி மதம் அற்றவர் என சான்றிதழ் வழங்கினார். இதனை பெற்றுக் கொண்ட குழந்தைகளின் தந்தை சந்தோஷ்பலகட்ட போராட்டத்திற்கு பிறகு தங்கள் குழந்தை களுக்கு சாதி மதம் அற்றவர் என பெறப் பட்ட சான்றிதழ் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது எனவும் அதிகாரிகளுக்கு நன்றியும் தெரிவித்தார்.
செய்தியாளர்.
மோ.அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக