பென்ஷன் வேலிடேஷன் மசோதாவை கைவிடகோரி வேலூரில் சிவில் ஓய்வூ தியர்கூட்டமைப்பினர் தர்ணா போராட்டம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 9 ஜனவரி, 2026

பென்ஷன் வேலிடேஷன் மசோதாவை கைவிடகோரி வேலூரில் சிவில் ஓய்வூ தியர்கூட்டமைப்பினர் தர்ணா போராட்டம்!

பென்ஷன் வேலிடேஷன் மசோதாவை கைவிடகோரி வேலூரில் சிவில் ஓய்வூ தியர்கூட்டமைப்பினர் தர்ணா போராட்டம் 
வேலூர் , ஜன 9 -
 
வேலூர் மாவட்டம் அகில இந்தியஅளவில் சிவில் பென்சனர்ஸ் சங்க கூட்டமைப்பின் சார்பில் மாவட்ட தலைநகரங்களில்
தர்ணா போராட்டம் நடத்திட எடுக்கப்பட்ட முடிவில் அடிப்படையில் வேலூர் தொலை தொடர்புத்துறை ஊழியர் சங்க அலுவல கம் எதிரில் இன்று 09.01.2026 வெள்ளிக் கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1.00 மணிவரை  தர்ணா போராட்டம் நடைபெற்றது ஒன்றிய அரசு எட்டாவது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை 01.01.2026 முதல் அமல்படுத்த வேண்டும் எனவும் ஜனவரி 2026க்கு முன் ஓய்வு பெற்ற ஓய்வூதியர்களின் ஓய்வூதியத்தை உயர்த்தும் வகையில் குறிப்பு விதிமுறை களை (Tearms of Reference) மாற்றியமை என வலியுறுத்தியும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஓய்வூதிய திருத்த மசோதாவை  (Pension Validation Bill) கைவிட வேண்டும் எனவும்  கோரி 
  இந்த தர்ணா போராட்டத்திற்கு அகில இந்திய தொலைத்தொடர்புத்துறை ஊழியர் சங்கத்தின் மாநிலத்தலைவர் சி.ஞானசேகரன் தலைமை தாங்கினார்.   ஒருங்கிணைப்புக்குழுவின் மாவட்ட பொருளாளர் எ.கதிர்அகமது,  தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச்சங்க மாவட்ட தலைவர் முனைவர் செ.நா.ஜனார்த்தனன், தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாநில செயலாளர் பா.ரவி,  சிவில் ஓய்வூதியர் கூட்டமைப்பின் மாவட்ட செயலாளர் பி.லோகநாதன், ஓய்வூதியர் சங்கங்களின் தேசிய ஒருங்கிணைப்பு குழுவின் கோட்ட செயலாளர் சி.தங்க வேலு பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் பி.முருகன் ஆயுள் காப்பீட்டு ஓய்வூதியர் சங்க கோட்ட செயலாளர் செந்தில் வேல் அஞ்சல் ஆர் எம் எஸ் ஓய்வூதியர் சங்க மாநில செயல் தலைவர் ஜி நரசிம்மன் மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன மாவட்ட செயலாளர் ஏ.பெருமாள்  காப்பீட்டுக் கழக ஓய்வூதியர் சங்கத்தின்  ராமன் தெற்கு ரயில்வே ஓய்வூதியர் சங்க கோட்ட உதவி செயலாளர் கே முரு கானந்தம் சிஐடியு இந்திய தொழிற்சங்க கூட்டமைப்பின்  மாவட்ட தலைவர் பரசுராமன் ஆகியோர் தர்ணாவில் கருத்துரை ஆற்றினர் முடிவில் மாவட்ட துணைச் செயலாளர் பி ஸ்ரீதரன் நன்றி கூறினார் இந்த தர்ணா போராட்டத்தில் ஒன்றிய அரசே ஒன்றிய அரசே ரத்து செய் ரத்து செய் பென்ஷன் வேலிடேசன் சட்டத்தை ரத்து செய் ரத்து செய் ஒன்றிய அரசே மத்திய அரசே அமல் படுத்து அமல் படுத்து எட்டாவது ஊதியக்குழு ஜனவரி மாதம் முதல் அமல்படுத்து ஒன்றிய அரசே மத்திய அரசே மாற்றியமை மாற்றியமை ஓய்வூதியத்தை உயர்த்தும் வகையில் குறிப்பு விதிமுறைகளை மாற்றி அமை என கோரிக்கை முழக் கங்கள் எழுப்பினர்.  இந்த தர்ணா போராட்டத்தில் 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள், அஞ்சல் ஆர்.எம்.எஸ், பி.எஸ்.என்.எல்,   போக்கு வரத்து, காப்பீட்டு கழகம் பொதுத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்த 100க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் பங்கேற்றனர்.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad