கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் அமைச்சர் கீதா ஜீவன் வழங்கினார். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 1 ஜனவரி, 2026

கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் அமைச்சர் கீதா ஜீவன் வழங்கினார்.

கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் அமைச்சர் கீதா ஜீவன் வழங்கினார் 

டிச.30- தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா ஈரோடு மாவட்டத்திலிருந்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அதனை தொடர்ந்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தூத்துக்குடி மாவட்டத்தின் சார்பாக கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா தூத்துக்குடி மாவட்ட உள்விளையாட்டரங்கத்தில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தூத்துக்குடி மாநகராட்சி, 3 நகராட்சிகள் மற்றும் 18 பேரூராட்சிகளிலுள்ள 417 வார்டுகளுக்கு டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் 30 விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய 618 தொகுப்புகள் (Sports Kit) வழங்கினார்.

இந்நிகழ்வில் மாநகர செயலாளர் எஸ் ஆர் ஆனந்தசேகரன் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார் மாவட்ட ஆட்சித் தலைவர் இளம்பகவத், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ந.ஆ.ஜெயரத்தினராஜன் பயிற்றுநர்கள் பலர் கலந்து கொண்டனர்.


தூத்துக்குடி செய்தியாளர் கணேஷ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad