குடியாத்தம் அடுத்த பரதராமி சோதனை சாவடி அருகே 75 கிலோ கஞ்சா பறிமுதல். இருவர் கைது!
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒடிசா மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு லாரியில் கடத்திவரப்பட்ட 75 கிலோ கஞ்சா பறிமுதல்- இருவரை கைது செய்து பரதராமி போலீசார் விசாரணை
வேலூர் மாவட்டம் குடியாத்தம்,, ஒடிசா மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு லாரியில் கஞ்சா கடத்தி வருவதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஆந்திர தமிழக எல்லையில் உள்ள பரதராமி சோதனை சாவடியில் பரதராமி போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த னர் அப்போது சரக்கு லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்த பொழுது அதில் 75 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது இதனையடுத்து 75கிலோ. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த பிரகாஷ் (வயது35)மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த வெங்கடேசன் (வயது 44) ஆகிய இருவரையும் கைது செய்தனர் மேலும் அவர்களிடம் மேற் கொண்ட விசாரணையில் ஒரிசாவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து தமிழகத் தில் விற்பனை செய்வது தெரியவந்தது இதனையடுத்து இருவரையும் கைது செய்த பரதராமி போலீசார் மேலும் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக