குடியாத்தம் சட்டமன்றத் தொகுதி பேர்ணாம்பட்டில் 100 நாள் வேலை திட்ட. பணியாளர்களுடன் கலந்து உரை !
வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்டமன்ற தொகுதி பேரணாம்பட்டியில் மத்தியில் ஆண்டு கொண்டிருக்கும் பாசிச பாஜக அரசு உலகின் மிகப் பெரிய வறுமை ஒழிப்புத் திட்டமான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் (MGNREGA) பெயரை விக்சித் பாரத் ஊரக வாழ்வாதாரம் மற்றும் வேலை வாய்ப்பு திட்டம் (VB G RAM G) என்று சமீபத்தில் பெயர் மாற்றம் செய்து தேசத் தந்தை மகாத்மா காந்தி அடிகளை மீண்டும் ஒரு முறை கொலைசெய்துள்ளது இந்த பெயர் மாற்றத்தை நியாயப்படுத்தி பேசவும் பொதுமக்கள் மத்தியில் இந்த திட்டம் குறித்து உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்ப திட்டமிட்டுள்ள பாஜக வின் பொய் பிரச்சாரங்களை முறியடிக் கும் வகையில் வேலூர் மாவட்டம் பேர ணாம்பட்டு வட்டாரம் மசிகம் கிராமத்தில் வேலூர் மாவட்ட RGPRS சார்பில் நூறு நாள் வேலைத் திட்ட பணியாளர்களை நேரில் சந்தித்து கலந்துரையாடும் நிகழ்ச்சி இன்று புதன்கிழமை பிற்பகல் நடைப்பெற்றது நிகழ்வில் வேலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி (ம) தலைவர் கு.சுரேஷ்குமார் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திற்கும் (MGNREGA) தற்போது மோடி அரசு காழ்ப்புணர்ச்சியு டன் நிறைவேற்றியுள்ள மக்கள் விரோத விக்சித் பாரத் ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திற்கும் (VB G RAM G) இடை யேயுள் ள வேறுபாடுகள் குறித்து நூறு நாள் வேலைத் திட்ட பணியாளர்களுக்கு விவரமாக எடுத்துரைத்தார். வேலூர் மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் திருமதி. கிருஷ்ணவேணி ஜலந்தர் விளக்கவுரை ஆற்றினார். தமிழ்நாடு RGPRS துணைத் தலைவர் ராஜசேகரன் நூறு நாள் வேலைத் திட்ட பணியாளர் களர்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். நிகழ்வில் வேலூர் மாவட்ட RGPRS தலைவர் ஆனந்தவேல் அறிமுக உரையாற்றினார். நிகழ்வில் RGPRS நிர்வாகிகள் கோவிந்தசாமி, மகேஷ் வரன், மோகன், ரையான், மனோகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக