தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த நபர் கன்னியாகுமரி மாவட்ட காவல் துறையினரால் கைது - 9 இருசக்கர வாகனங்கள் பறிமுதல். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 31 டிசம்பர், 2025

தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த நபர் கன்னியாகுமரி மாவட்ட காவல் துறையினரால் கைது - 9 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்.

தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த நபர் கன்னியாகுமரி மாவட்ட காவல் துறையினரால் கைது - 9 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேசமணி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகனம் திருட்டு தொடர்பாக பெரியவளை பகுதியை சேர்ந்த சதாசிவம் (49) என்பவர் புகார் அளித்திருந்தார். 

இப்புகார்கள் சம்பந்தமாக உடனடியாக குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.

உத்தரவின் படி நாகர்கோவில் உட்கோட்ட காவல் துணை காவல் கண்காணிப்பாளர் சிவசங்கரன், மேற்பார்வையில் , ஆய்வாளர் சாந்தி மற்றும் உதவி ஆய்வாளர்கள் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது

இந்த விசாரணையில் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்டது திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம், ஜாமியா பள்ளிவாசல் தெரு பகுதியை சேர்ந்த முகமது ஹனிபா என்பவரின் மகன் பீர்முகமது (33) என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் அவரை கைது செய்து, அவரிடமிருந்து 9 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்பு அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad