காட்பாடி ரெட்கிராஸ் சங்கத்தின் சார்பில்
துணைக்கண் காணிப்பாளர் விஜய குமாருக்கு வரவேற்பு ! போக்கு வரத்து சீரமைக்க உறுதி
வேலூர் மாவட்டம் காட்பாடி வட்ட இந்தி யன் ரெட்கிராஸ் சங்கம் சார்பில் காட்பாடி காவல்துறை துணை கண்காணிப்பாள ராக புதியதாக பொறுப்பேற்றுள்ள விஜய குமார் அவர்களை அவைத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் தலைமையில் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வரவேற்றனர் வாழ்த்துகளை தெரிவித் தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.சீனிவாசன், மேலாண்மைக்குழு உறுப்பினர் எஸ்.ரமேஷ்குமார்ஜெயின், பி.என்.ராமச்சந்திரன், செயலாளர் எஸ்.எஸ்.சிவவடிவு பொருளார் வி.பழனி, ஆகியோர் சந்தித்து பேசினர்.அப்போது காட்பாடியில் போக்குவரத்து நெரிசல் மிகுதியாக உள்ளது இதனை விரைந்து சீரமைக்க உரிய நடவடிக்கைகள் எடுக் கப்படும் என்றும் சித்தூர் பேருந்து நிறுத் தம் அருகில் சில மாற்றங்கள் மேற் கொள்ள ஆய்வு செய்யபடுவதாகவும் அதன் பிறகு ரெட்கிராஸ் உள்ளிட்ட தன்னார்வ அமைப்புகளிடம் கருத்துகள் கேட்டறிந்து போக்குவரத்து சீரமைக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார். மேலும் தடம் எண்.1 மற்றும் 2 ஆகிய நகர பேருந்துகள் காந்திநகர் உள்ளே சென்று வருவதில்லை என்று கூறியபோது இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர் .
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக