நாகர்கோவில் - காவல்கிணறு புறவழிச்சாலையில் வெள்ளரிக்காய் ஏற்றி வந்த லாரி, எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே உள்ள தடுப்புச் சுவரில் (Center Median) மோதி கவிழ்ந்தது.
இந்த விபத்தில் லாரி பலத்த சேதமடைந்ததுடன், ஏற்றி வரப்பட்ட வெள்ளரிக்காய்கள் சாலையில் சிதறின. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், காயமடைந்த லாரி ஓட்டுநரை மீட்டு சிகிச்சைக்காக உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக