தூத்துக்குடி பேருந்து நிலையத்தில் தேசியக் கொடியை நிரந்தரமாக பறக்கவிட வேண்டும் என்று பாஜக பிரமுகர் கோரிக்கை
ஜன.22, தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையத்தில் இந்திய தேசியக் கொடியை நிரந்தரமாக பறக்கவிட வேண்டும் என்று பாஜக பிரமுகர் காசிலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதைதொடர்ந்து அவர் ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனுவில், "தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பழைய பேருந்து நிலையம் மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் விரிவாக்கம் செய்யப்பட்டு சில ஆண்டுகளாக பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ளது.
எனவே, நமது இந்திய தேசியக் கொடியை பழைய பேருந்து நிலைய நுழைவாயிலில் பிரமாண்டமாக ஏற்றி, தினமும் பறக்கவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி செய்தியாளர் கணேஷ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக