மாற்றுத்திறனாளிகளை தேர்வு செய்ய சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 22 ஜனவரி, 2026

மாற்றுத்திறனாளிகளை தேர்வு செய்ய சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு !

மாற்றுத்திறனாளிகளை தேர்வு செய்ய சிறப்பு முகாம்  மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு !
திருவண்ணாமலை , ஜன 22 -

               திருவண்ணாமலை மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகளை மருத்துவர்கள் பரிசோதனை செய்து குறைபாடு உள்ள வர்களை தேர்வு செய்து உதவி உபகர ணங்கள் வழங்கும் சிறப்பு முகாம் நடை பெற்றது தமிழக அரசின் மாற்றுத்திறனா ளிகள் நலத்துறை மூலம் திருவண்ணா மலை மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திற னாளிகளுக்கு திருவண்ணாமலை நாடா ளுமன்ற உறுப்பினர் மற்றும் ஒன்றிய அரசின் அலிம்கோ நிறுவனம் சார்பில், ஏடிபிஐ திட்டத்தின் கீழ் உதவி உபகரணங் களான மூன்று சக்கர சைக்கிள்கள், சக்கர நாற்காலிகள், சிறப்பு சக்கர நாற்காலி கள், ஊன்றுகோல்கள், நடைபயிற்சி உபகரணங்கள், காதொலிக்கருவிகள், பிரெய்லி கிட், மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான கிட், தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான செல் போன் கள் வழங்கப்படுகிறது. மேலும், பார்வை யற்றோருக்கான ஸ்மார்ட் போன்கள், பேட்டரியால் இயங்கும் மூன்று சக்கர வண்டிகள், பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலிகள், முடநீக்கு கருவிகள் நவீன செயற்கை கால்கள் போன்ற பல்வேறு உபகரணங்கள் வழங்கப்பட உள்ளன. இந்த சிறப்பு முகாமில் பயனாளிகளை தேர்வு செய்ய அரசு எலும்பு மருத்துவர், காது மூக்கு தொண்டை மருத்துவர் மற்றும் மன நல மருத்துவர் ஆகியோர் கலந்துகொண்டு பயனாளிகளை தேர்வு செய்ய உள்ளனர். உதவி உபகரணங்கள் தேவைப்படும் மாற்றுத்திறனாளிகள் முகாமில் கலந்து கொள்ளலாம்.அந்தந்த பகுதிகளில் நடைபெறும் முகாம்களுக்கு நேரில் சென்று மருத்துவ பரிசோதனை செய்து, தங்களுக்குத் தேவையான உதவி உபகரணங்கள் பெற்று பயனடையலாம்.
திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர் மற்றும் செங்கம்  திருவண்ணாமலை டவுன்ஹால் பள்ளியில் வரும் 24ம் தேதி முகாம் நடைபெறும்.வந்தவாசி மற்றும் செய்யாறு , பகுதியில் வந்தவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்  வரும் 27ம் தேதியும் கலசப்பாக்கம் மற்றும் போளுர் பகுதியில் போளுர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வரும்  28ம் தேதியும் ஆரணி பகுதியில் போளுர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்  30ம் தேதியும் முகாம்கள்  நடைபெறும்.
நேரம்: காலை10 மணி முதல் மதியம் 2 மணி வரை முகாம்களுக்கு வரும் மாற்று த்திறனாளிகள் கொண்டு வர வேண்டி யவை .1.மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை அசல் மற்றும் நகல்  2.மத்திய அரசின் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை அசல் மற்றும் நகல 3.ஆதார் அட்டை அசல் மற்றும் நகல்
4.குடும்ப அட்டை அசல் மற்றும் நகல் 
5. புகைப்படம் 2, ஆகியவற்றை சமர்பித்து  உதவி உபகரணங்களை பெற்று பயன் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை செய்தியாளர் 
T.R.கலையரசு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad