ஜன.22- தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் வருகிற 24ம் தேதி (சனிக்கிழமை) முழு வேலை நாளாக செயல்படும் என முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சங்கீதா சின்னராணி பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள செயல்முறை கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்படும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு 24.01.2026 சனிக்கிழமை அன்று முழு வேலை நாளாக செயல்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த செயல்முறைக் கடிதமானது இடைநிலை, தொடக்கக் கல்வி, தனியார் பள்ளிகளின் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும், தூத்துக்குடி மற்றும் கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், மெட்ரிக் பள்ளிகளின் முதல்வர்கள் மற்றும் அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி செய்தியாளர் கணேஷ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக