திருப்பத்தூர் மாவட்ட காங்கிரஸ் மாவட் டத் தலைவராக நியமிக்கப்பட்ட விஜய் இளஞ்செழியனுக்கு உற்சாக வரவேற்பு !
திருப்பத்தூர் , ஜன 22 -
திருப்பத்தூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி யின் புதிய மாவட்டத் தலைவராக நியமிக் கப்பட்ட விஜய் இளஞ்செழியனுக்கு, திருப்பத்தூர் நகரில் கட்சி சார்பில் சிறப் பான வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய் யப்பட்டது. இதனை முன்னிட்டு, திருப்பத் தூர் புதிய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள ராகுல் காந்தி சிலைக்கு, புதிய மாவட்டத் தலைவர் விஜய் இளஞ் செழியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து, திருப்பத்தூர் நகரில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்திற்கு ஊர்வ லமாகச் சென்று, அங்கு அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர் இந்த நிகழ்ச்சிக்கு மாநில பொதுக்குழு உறுப்பினர் கிஷோர் பிரசாந்த் தலைமை தாங்கினார். புதிய மாவட்டத் தலைவர் விஜய் இளஞ்செழியனுக்கு சால்வை அணிவித்து, கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சார்பில் சிறப்பான வர வேற்பு அளிக்கப்பட்டது.இந்த நிகழ்வில் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் பார்த்திபன், மாவட்ட செயலாளர் ரஜினி, நகர தலைவர் எஸ்வந்த் உள்ளிட்ட பல் வேறு பொறுப்பாளர்கள் மற்றும் ஏராள மான காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித் தனர்.
மாவட்ட செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக