தூத்துக்குடி 1வது ரெயில்வே கேட் 25ம் தேதி முதல் தற்காலிகமாக மூடல். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 22 ஜனவரி, 2026

தூத்துக்குடி 1வது ரெயில்வே கேட் 25ம் தேதி முதல் தற்காலிகமாக மூடல்.

தூத்துக்குடி 1வது ரெயில்வே கேட் 25ம் தேதி முதல் தற்காலிகமாக மூடல்

ஜன.22- தூத்துக்குடியில் வருகிற ஜனவரி 25-ம் தேதி முதல் ஜனவரி 28-ம் தேதி வரை இரட்டை ரெயில் பாதை திட்டதின் கீழ் பணிகள் நடைபெற உள்ளது.

தூத்துக்குடியில் ரெயில்வே பணிக்காக 1வது ரெயில்வே கேட் வரும் 25-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை தற்காலிகமாக மூடப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தூத்துக்குடியில் இரட்டை ரெயில் பாதை திட்டதின் கீழ் பணிகள் நடைபெற உள்ளதால் வருகிற ஜனவரி 25-ம் தேதி இரவு 9 மணி முதல் ஜனவரி 28-ம் தேதி மாலை 6 மணி வரை 1வது ரெயில்வே கேட் தற்காலிகமாக மூடப்படும். எனவே வாகன ஓட்டிகள் சாலை போக்குவரத்திற்கு மாற்று பாதையை பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தூத்துக்குடி செய்தியாளர் கணேஷ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad