தமிழர் திருநாளான தைப்பொங்கல் விழா வரும் 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் தைப்பொங்கல் திருநாளை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்வார்கள்.
தமிழக முழுவதும் அரசு அலுவலகங்கள் பள்ளிகள் கல்லூரிகளில் சமத்துவ பொங்கல் விழாக்கள் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகின்றன.
திருச்செந்தூர் அருகே உள்ள பரமன்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. மருத்துவர் நிவேதா தலைமையில் ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு பொங்கல் வைத்து மகிழ்ந்தனர்.
இதில் ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்கள், செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக