மறைசாட்சி புனிதர் தேவசகாயத்தை இந்திய நாட்டின் பொதுநிலையினரின் பாதுகாவலர் என திருத்தந்தை லியோ அறிவித்துள்ளார். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 12 ஜனவரி, 2026

மறைசாட்சி புனிதர் தேவசகாயத்தை இந்திய நாட்டின் பொதுநிலையினரின் பாதுகாவலர் என திருத்தந்தை லியோ அறிவித்துள்ளார்.

மறைசாட்சி புனிதர் தேவசகாயத்தை இந்திய நாட்டின் பொதுநிலையினரின் பாதுகாவலர் என திருத்தந்தை லியோ அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு விழா ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுண்ட் திருத்தலத்தில் நாளை மறுநாள் புதன்கிழமை மாலை காற்றாடி மலை மறைசாட்சி புனிதர் தேவசகாயம் திருத்தலத்தில் நடைபெற இருக்கிறது.

இதில் திருத்தந்தையின் அரசு தூதுவர் பேராயர் லியோபோல்டோ ஜிரெல்லி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இந்த அறிவிப்பை இந்திய திருஅவையின் மக்களுக்கு வெளியிட உள்ளார்.

இதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருவதாக கோட்டாறு மறை மாவட்ட ஆயர். நசரேன் சூசை செய்தியாளர்களுக்கு பேட்டி-இதில் திருத்தல அதிபர் மற்றும் லியோன் கென்சன்,கோட்டாறு மறை மாவட்ட செயலர் கிளாட்ஸ்டன், பொருளாளர் பிரான்சிஸ் சேவியர்,மறை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எட்மண்ட் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad