கன்னியாகுமரி மாவட்டத்தில் ஜன.16 மற்றும் 26 ஆகிய நாட்களில் மதுக்கடைகள், பார்களை மூடல் - ஆட்சியர் உத்தரவு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 12 ஜனவரி, 2026

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஜன.16 மற்றும் 26 ஆகிய நாட்களில் மதுக்கடைகள், பார்களை மூடல் - ஆட்சியர் உத்தரவு.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஜன.16 மற்றும் 26 ஆகிய நாட்களில் மதுக்கடைகள், பார்களை மூட ஆட்சியர் அழகுமீனா உத்தரவிட்டுள்ளார். 

திருவள்ளுவர் தினம் (16.01.2026), மற்றும் குடியரசு தினம் (26.01.2026) ஆகிய தினங்களை முன்னிட்டு 16.01.2026 (வெள்ளி கிழமை) மற்றும் 26.01.2026 (திங்கட் கிழமை) ஆகிய தினங்களில் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மதுபானக்கடைகள் மற்றும் FL2, FL3, FL3A மற்றும் FL3AA உரிமம் பெற்ற மதுபானக்கூடங்கள் ஆகியவை செயல்படாது என மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad