ஊர்நல கமிட்டி, துறைமுக கமிட்டியினர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்பு.
திருச்செந்தூர் அருகே வீரபாண்டியன் பட்டணத்தில் ஊர் நல கமிட்டி, துறைமுக கமிட்டி சார்பில் நிரந்தர தூண்டில் வளைவு அமைத்திட வேண்டியும், இதில்தீர்வு கிடைத்திட கோரிக்கைகளை வலியுறுத்தியும் கவன ஈர்ப்பு போராட்டம் கடந்த 2ம் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதில் தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் இருந்து கடலோரப் பகுதியில் வாழும் மீனவ கிராம வர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர். கடற்கரை திடலில் இன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இதில் வீரபாண்டியபட்டணம் பங்குத்தந்தை அலோசியுஸ்,உதவி பங்குத்தந்தை விஜின் மரியதாஸ், ஊர்நல கமிட்டி தலைவர் பெயிற்றன் வீராயன், துறைமுக கமிட்டி தலைவர் ஜெபமாலை பர்னாந்து, ஊர் பிரமுகர் ரெஜிபர்ட் பர்னாந்து மற்றும் 18 ஊர் கமிட்டியினர், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக