திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் குவிந்த பக்தர்கள் கூட்டம் சாமி தரிசனம் செய்ய பல மணி நேரம் காத்திருப்பு !
திருவண்ணாமலை , ஜன12 -
திருவண்ணாமலை மாவட்டம் அண்ணா மலையார் கோவிலில் வார விடுமுறை நாளை யொட்டி, ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால், சாமி தரிசனம் காண 5 மணி நேரத்திற்கு மேல் ஆனது
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தல மாக விளங்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அதி காலை 3.30 மணி அளவில் நடை திறக்கப் பட்டு அண்ணாமலையார் உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராத னைகள் நடைபெற்றன. அதை தொடர்ந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர் நேற்று வார விடு முறை என்பதால் தமிழ்நாடு மட்டுமின்றி, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட அண்டை மாநிலங்களை சேர்ந்த பக்தர்களும் அதிக அளவில் குவிந்தனர் .ராஜகோபுரம் வழியாக இலவச தரிசன வரிசையில் 4 முதல் 5 மணி நேரம் வரை காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். சாமி தரிசனம் காண வரும் பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் குடிநீர், நீர் மோர் உள்ளிட்டவை வழங்கப்பட்டன தரிசனத்து க்கு பிறகு திருமஞ்சனம் கோபுரம் வழியாக வெளியே சென்று கிரிவலம் செல்ல தொடங்கினார்கள்.
திருவண்ணாமலை செய்தியாளர்
-கலையரசு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக