விழாவில் கல்லூரி முதல்வர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். கல்லூரி தாளாளர் காபிரியேல் தேவயிரக்கம் ஜெப ராஜன் தலைமை தாங்கி தலைமை உரையாற்றினார்.
இந்த விழாவில் துணை முதல்வர் ஆக்னஸ் பிரேமா மேரி அறிமுக உரையாற்றினார். சிறப்பு விருந்தினராக மெர்சிராஜன் குரூப் ஆப் கம்பெனி இயக்குநர் சாமுவேல் கலந்து கொண்டார்.
மேலும் இந்த விழாவில் ஜெயராஜ் அன்ன பாக்கியம் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் கோயில் ராஜ், மர்காஷியஸ் கல்லூரி முதல்வர் ஜிவி எஸ்தர் ரத்தினகுமாரி மற்றும் ஜெயராஜ் அன்ன பாக்கியம் மெட்ரிகுலேஷன் பள்ளி முதல்வர் ஸ்மைலி ஜெபரஞ்சினி கலந்து கொண்டார்கள்.
கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு உணவுகளை சமைத்து மற்றும் உணவுகளை வாங்கி சிறப்பித்தனர்.
நிகழ்ச்சிகளை பேராசிரியர் ஸ்டான்லி ஜாண்சன் தொகுத்து வழங்கினார். இறுதியில் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஞானசெல்வன் நன்றி கூறினார்.
ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர் காபிரியேல் தேவயிரக்கம் ஜெபராஜன் அறிவுறுத்தலின்படி கல்லூரி முதல்வர் ஜெயக்குமார் வழிகாட்டுதலின்படி துணை முதல்வர் ஆக்னஸ் பிரேமா மேரி, நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் ஞானசெல்வன் மற்றும் ஜேப்னி பென்சியா ஆகியோர் விழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக