மக்கள் களப்பணி இயக்கம் சார்பில் இலவச மருத்துவ மையம் திறப்பு விஐடி துணைத் தலைவர் பங்கேற்பு !
வேலூர் , ஜன 27 -
வேலூர் மாவட்டம் மக்கள் களப்பணி இயக்கம் சார்பாக வேலூர் சங்கரன் பாளையத்தில் இலவச மருத்துவ மையம் விஐடி பல்கலைக்கழகம் உதவி துணைத் தலைவர் காதம்பரி எஸ் விஸ்வநாதன் அவர்களால் குத்துவிளக்கேற்றி முதல் சிகிச்சை துவங்கப்பட்டது. இவ்விழாவி ற்கு வேலூர் உதவும் உள்ளங்கள் சந்திர சேகரன் ஐயா மற்றும் அறிவொளி இயக்கத் தலைவரும், முன்னாள் காட்டு புத்தூர் ஊராட்சி மன்ற தலைவருமான விஸ்வநாதன் ஐயா அவர்கள் தலைமை தாங்கினர். இங்கு பொது மக்களுக்கு ரத்த அழுத்தம் , ரத்தம் சக்கரை அளவு, உடலில் உள்ள கொழுப்பின் அளவு, மற்றும் உடலிடை ஆகிய பரிசோதனை கள் இலவசமாக செய்யப்பட்டது. மற்றும் பல்வேறு உடல் பிரச்சினைகளுக்கு மருத்துவர் மூலம் ஆலோசனை வழங்கி இலவச மாக மாத்திரைகள், மருந்துகளும் வழங்கப்பட்டன. இந்த சிகிச்சை மையத் தில் நூற்றுக்கும் அதிகமானோர் சிகிச் சை பெற்று பயனடைந்தனர். இந்த இலவச சிகிச்சை மையம் வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் சங்கரன் பாளையத்தில் உள்ள மக்கள் களப்பணி இயக்கம் அலுவலகத்தில் நடைபெறும் என்று மக்கள் களப்பணி இயக்க நிறுவனர் டாக்டர் ரவிஷங்கர் தெரிவித் துள்ளார். மக்கள் களப்பணி இயக்கம் மூலம் இலவச தாய்ப்பால் தானம், இலவச முதியோர் இல்லம், மது பழக்கத்திலி ருந்து விடுபட இலவச மருந்துகள், இலவச மாலை பள்ளி, இலவச கண் அறுவை சிகிச்சை முகாம்கள் இலவச செயற்கை கால் வழங்கும் திட்டம் போன்ற பல்வேறு நலத் திட்டங்கள் செய்து வரும் டாக்டர் ரவிஷங்கர் இந்த இலவச சிகிச்சை மையத்தின் சேவைகளை அனைத்து மக்களும் பெற்று பயனடையுமாறும் தெரிவித்தனர்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக