கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்க தீர்மானம் போடுங்க பொதுமக்கள் ஆவேசம் !
திருப்பத்தூர் , ஜன 27 -
என் கிராமத்திற்கு இன்னும் சுதந்திரம் கிடைக்கல! கிராம சபை கூட்டத்தில் கலெக்டரின் மீது நடவடிக்கை எடுக்க தீர்மானம் போடுங்க! குடியரசு தினத்தை கருப்பு நாளாக கருதி கருப்பு கொடி காண்பித்த நபரால் பரபரப்பு!
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் காக்கங்கரை ஊராட்சியில் ஜனவரி 26 குடியரசு தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபா கூட்டம் ஊர் பொதுமக்கள் மற்றும் அரசு அதிகாரிகள் முன்னிலை யில் பலர் கலந்து கொண்டு நடை பெற்றது அப்போது அதே பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர் பல்வேறு கேள்விகள் அடங்கிய லிஸ்ட்டுடன் வந்து
கிராம சபை கூட்டத்திற்கு எத்தனை அதிகாரிகள் கலந்து கொள்ள வேண்டும், எந்தெந்த ஆவணங்களை மக்கள் மன்றத் தில் காண்பிக்க வேண்டும், என்ற அடுக் கடுக்கான பல கேள்விகளைக் கேட்டு பற்றாளர் வேலாயுதத்தை கேட்டு திணற டித்தார். அப்போது அதிகாரி பதில் கூற முடியாமல் விழி பிதுங்கி நின்றனர்.
அப்போது காக்கங்கரை கிராமத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று உள்ளது அது குறித்து மாவட்ட ஆட்சியரி டம் பலமுறை மனு அளித்துள்ளேன் ஆனால் அதனை கண்டு கொள்ளாமல் மாவட்ட ஆட்சியர் செயல்பட்டு வருகிறார்.
எனவே தூங்கிக் கொண்டிருக்கும் மாவ ட்ட ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த கிராம சபை கூட்டத் தில் தீர்மானம் போடுங்கள் கோரிக்கை வைத்தார். மேலும் இந்திய முழுவதும் குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் காக்கங்கரை கிராமத்திற்கு மட்டும் சுதந்திரம் கிடைக்கவில்லை எனக்கூறி கருப்புச்சட்டை அணிந்து வந்தேன் எனவும் கூறினார் அதனை தொடர்ந்து அதிகாரிகளுக்கு எதிராக கிராமசபை கூட்டத்தில் கருப்புக் கொடி காண்பித்து அங்கிருந்து வெளியேறி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது
மாவட்ட செய்தியாளர்
மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக