குடியாத்தம் அடுத்த பரதராமி பகுதியில் . கலவை ஆதி பராசக்தி தோட்டக். கலைக் கல்லூரி சார்பாக. விழிப்புணர்வு ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 27 ஜனவரி, 2026

குடியாத்தம் அடுத்த பரதராமி பகுதியில் . கலவை ஆதி பராசக்தி தோட்டக். கலைக் கல்லூரி சார்பாக. விழிப்புணர்வு !

குடியாத்தம் அடுத்த பரதராமி பகுதியில் . கலவை ஆதி பராசக்தி தோட்டக். கலைக் கல்லூரி சார்பாக. விழிப்புணர்வு  !
குடியாத்தம் ,ஜன 27 - 

வேலூர் மாவட்டம். குடியாத்தம் அடுத்த பரதராமி பகுதியில் . கலவை. ஆதி பராசக்தி தோட்டக்கலை கல்லூரி சார்பில் மண் மாதிரிகள் எடுக்கும் முறை பற்றி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. 
மண் மாதிரிகள் சேகரிப்பு என்பது விவ சாயத்தில் மண்ணின் சத்துக்களை அறிந்து சரியான உரங்களை பயன் படுத்த உதவும் முக்கிய செயல்முறை ஆகும் இதற்கு மண்ணின் மேற்பரப்பில் இருந்து சில அங்குலங்கள் ஆழத்தில் பல இடங்களில் இருந்து மாதிரிகளை எடுத்து அவற்றை ஒன்றாக கலந்து மண் ஆய்வு கூடத்திற்கு அனுப்ப வேண்டும். மண் மாதிரிகள் சேகரிக்கும் முறைப்படி நிலத்தின் நடுப்பகுதியில் பயிரின் வேர் மண்டலம் வரை மாதிரிகள் எடுக்க வேண்டும்.ஒரு சிறிய வி வடிவில் பள்ளத் தை தோண்டி பள்ளத்தின் ஓரங்களில் இருந்து சீரான தடிமனில் மண்ணை எடுத்து ஒரு சுத்தமான காகிதத்தில் அல்லது பாலிதீன் பையில் வைக்க வேண்டும் பல இடங்களில் எடுத்த மாதிரிகளை ஒன்றாக கலந்து அதில் உள்ள கற்கள் வேர்கள் போன்றவை நீக்க வேண்டும். மண் மாதிரியை சுத்தமான பாலிதீன் பையில் போட்டு வையின் வெளிப்புறத்தில் பெயர் இடம் பயிர் . வகை போன்ற விவரங்களை பென்சிலில் எழுதி ஓட்டவும் பின்பு மண் பரிசோதனை நிலையத்திற்கு அனுப்பி மண்ணின் தரத்தை அறியலாம். இதில் தோட்டக் கலை மாணவிகள். பா பூஜா. கா பிரித் திகா கு ராஜேஸ்வரி. ச சுரேணுகா சு. ரேணுகா.த. ரூபா ஸ்ரீ உள்ளிட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad