திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தேசிய கொடியை ஏற்றி வைத்து பல் வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் !
திருவண்ணாமலை , ஜன 27 -
திருவண்ணாமலை மாவட்டம் ஆட்சித் தலைவர் க.தர்ப்பகராஜ், அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள ஆயுதப்படை மைதா னத்தில் 77-வது குடியரசு தினத்தை முன்னிட்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் விழாவில் பல்வேறு அரசு துறைகளின் சார்பாக பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் களை வழங்கி சிறப்பித்தார்.
திருவண்ணாமலை மாவட்ட செய்தியாளர் கலையரசு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக