தமிழக - ஆந்திரா எல்லை சோதனை சாவடியில் கனரக வாகன ஓட்டுனர்களு க்கு இலவச கண் பரிசோதனை முகாம் !
வேலூர் மாவட்டம் காட்பாடி கிறிஸ்டியான் பேட்டை போக்குவரத்து சோதனை சாவ டியில் இலவச கண் பரிசோதனை முகாம்
தமிழ்நாடு அரசின் போக்குவரத்து துறை யும், காட்பாடி வட்ட இந்தியன் ரெட்கிராஸ் சங்கமும், டாக்டர் அகர்வால் கண் மருத்து வமனையும் இணைந்து 77வது குடியரசு தின நாளில் காட்பாடி கிறிஸ்டி யான் பேட்டையில் அமைந்துள்ள போக்கு வரத்து சோதனை சாவடியில் போக்கு வரத்து மாத விழா முன்னிட்டு இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
இம்முகாமிற்கு ரெட்கிராஸ் அவைத்தலை வர் செ.நா.ஜனார்த்தனன் தலைமை தாங் கினார். மோட்டார் வாகன ஆய்வாளர்கள் எம்.அம்பிகா, என்.வீரராகவன், ஜி.பிரியா, எம்.எஸ்.கருணாகரபிரகாண், ரெட்கிராஸ் நிர்வாககிகள் ஆர்.விஜயகுமாரி, ஆர்.சீனி வாசன், எஸ்.ரமேஷ் குமார் ஜெயின், வி.பழனி ஆகியோர் முன்னிலை வகித் தனர். வேலூர் வட்டார போக்குவர த்து அலுவலர் பி.சுந்தரராஜன் கண் பரி சோதனை முகாமினை தொடக்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது
விபத்துகள் குறைக்க வேண்டுமெனில் கண்பார்வை தெளிவாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த கண் பரிசோதனை முகாம் நடைபெறுகிறது. இம் முகாமில் கனரக வாகன ஓட்டு நர் களுக்கு இலவசமாக கண் பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும் இரு சக்கர வாகன ஓட்டிகள் தான் விபத்து காலங் களில் அதிக அளவில் பாதிக்கப் படு கின்றனர். சில நிகழ்வுகளில் பாதசாரி களும் பாதிக்கப்படுகின்றனர். எனவே இரு சக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் தலைகவசம் அணிந்து செல்ல வேண்டு கின்றோம். மேலும் போக்குவரத்து பாதுகாப்பு குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. வித்து இல்லா வாகன போக்குவரத்திற்கு அனைவரும் இணைந்து செயலாற்று வோம் என்றார். முகாமில் 200 க்கும் மேற்பட்ட கனரக வாகன ஓட்டுனர்களு க்கு கண்பரிசோதனை மேற்கொள்ளப் பட்டது.மேலாண்மைக்குழு உறுப்பினர் எ.ஶ்ரீதரன்ஜெயின், ஆர்.சுதாகர், பாபு, எஸ்.தைவிக், எஸ்.தன்வின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக