ரூ. 44.84 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள குடியாத்தம் அரசு தலைமை மருத்துவ மனை திறப்பு ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 26 ஜனவரி, 2026

ரூ. 44.84 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள குடியாத்தம் அரசு தலைமை மருத்துவ மனை திறப்பு !

ரூ. 44.84 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள குடியாத்தம் அரசு தலைமை மருத்துவ மனை  திறப்பு !
குடியாத்தம் ,ஜன 26 -

     வேலூர் மாவட்டம் குடியாத்தம் ரூ.44.84 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள  குடியாத் தம் அரசு  தலைமை மருத்துவமனை புதிய கட்டடத்தையும் ,  ரூ.1.02 கோடி  மதிப்பில்  கட்டப்பட்டுள்ள 3 பொது சுகா தார கட்டடங்களையும்  பொதுப் பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, அவர்கள்,   மருத்துவம் (ம) மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அவர்கள் தலைமையில்  இன்று ( 26.1.2026 )திறந்து வைக்கப்பட்டது.

வேலூர் மாவட்டத்தில் ரூ.44.84 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள  குடியாத்தம் அரசு  தலைமை மருத்துவமனை புதிய கட்டடத்தையும்,  ரூ.1.02 கோடி  மதிப்பில்  கட்டப்பட்டுள்ள 3 பொது சுகாதார கட்டடங் களையும்   பொதுப் பணித்துறை அமைச் சர் எ.வ.வேலு, அவர்கள்,   மருத்துவம் (ம) மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அவர்கள் தலைமை யில்   இன்று (26.01.2026) குடியாத்தத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திறந்து வைத் தார். 

குடியாத்தம் அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவமனை கட்டிடம்  விவரம்!
குடியாத்தம் அரசு மருத்துவமனை ரூ.40 கோடி மதிப்பில்  தரைத்தளம் மற்றும் 5 தளங்களுடன் 9210.37 ச.மீ (ம) 99131.21 ச.அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.  மொத்த படிக்கட்டுகள் 2, மொத்த மின் தூக்கிகளுடனும், 253 படுக்கைகளுடனும், 5 அறுவை சிகச்சை அரங்களுடனும் கட்டப்பட்டுள்ளது. 

தரைத்தளம் மருந்தகம், நோய் கண்டறியும் பிரிவு, வெளிநோயாளிகள் அவசர சிகிச்சைப்பிரிவு, நோயாளிகள் மருத்துவ சோதனை பிரிவு, மின்சார அறை, பிரேத பரிசோதனை பிரிவு, மத்திய கிருமிநீக்கம் மற்றும் வழங்கல் துறை போன்ற வசதிகளுடன் 1480 ச.மீ பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. 
முதல்தளம் மகப்பேறு மருத்துவ அறுவை சிகிச்சை அரங்கு, பிரசவபிரிவு, பிரசவத் திற்கு பின் சிகிச்சை வார்டு, மின்சார அறை, மருந்து கிடங்கு மற்றும் அறுவை  சிகிச்சை கிடங்கு போன்ற வசதிகளுடன் 1430.60 ச.மீ பரப்பளவில் அமைக்கப் பட்டுள்ளது. 

இரண்டாம் தளம் பெண்கள் சிகிச்சை  பிரிவு, குழந்தைகள் சிகிச்சை பிரிவு, மின்சார அறை, நோயுற்ற பிறந்த குழந்தைகளுக்கான சிகிச்சை பிரிவு போன்ற வசதிகளுடன் 1555.18 ச.மீ பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது.
 
மூன்றாம் தளம் ஆண்கள் சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சைக்கு பின் வார்டு, மின்சார அறை போன்ற வசதிகளுடன் 1555.18 ச.மீ பரப்பளவில் அமைக்கப் பட்டுள்ளது. 

நான்காம் தளம் தீவிர சிகிச்சை பிரிவு, சிறப்பு சிகிச்சை பிரிவு, சிறுநீர் பிரித்தல் பிரிவு, மின்சார அறை, தீப்புண் சிகிச்சை பிரிவு போன்ற வசதிகளுடன் 1555.18 ச.மீ பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. 
ஐந்தாம் தளம் கண் அறுவை சிகிச்சை அரங்கு, பொது அறுவை சிகிச்சை அரங்கு, எலும்பு சம்மந்தப்பட்ட அறுவை சிகிச்சை அரங்கு, அவசர அறுவை சிகிச்சை அரங்கு, அறுவை சிகிச்சைக்கு பின் வார்டு, மின்சார அறை போன்ற வசதிகளுடன் 1555.18 ச.மீ பரப்பளவில்  அமைக்கப்பட்டுள்ளது.  மேலும் மின் தூக்கி மற்றும் படிக்கட்டு அறை 78.25 ச.மீ பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. 

3  பொது சுகாதார  கட்டடங்கள் விவரம் 
வேலூர் மாநகராட்சியில் ரூ.22 இலட்சம் மதிப்பில்  வேலூர் சத்துவாச்சாரி பொது சுகாதார கட்டடம் கட்டப்பட்டுள்ளது. 
குடியாத்தத்தில்   ரூ.50 இலட்சம்   மதிப் பில் கல்லப்பாடி பொது சுகாதார கட்டடம் கட்டப்பட்டுள்ளது. குடியாத்தத்தில் ரூ.30 இலட்சம் மதிப்பில் அரிகவாரிப்பல்லி துணை சுகாதார நிலைய புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. ரூ.1.02 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 3 பொது சுகாதார கட்டடங் களையும்  பொதுப் பணித்துறை அமைச் சர் எ.வ.வேலு, அவர்கள்,  மருத்துவம் (ம) மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அவர்கள் தலைமை யில் இன்று திறந்து வைத்தார். குடியாத் தம் அரசு மாவட்ட தலைமை மருத்துவ மனை 2021 ஆம் ஆண்டு   தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவால் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் படுக்கைகள் எண்ணிக்கை 190 ஆக உயர்த்தப்பட்டது.பின்னர்  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர் களால் குடியாத்தம் அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு கடந்த 2022 ஆம் ஆண்டு புதிய மருத்துவமனை கட்டி டத்திற்கு ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு 2023ம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டு ரூ.40 கோடி (ரூயாய் நாற்பது கோடி) மதிப்பீட்டில் தற்போது கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடமும். ரூ4,84,000/- (ரூபாய் நான்கு கோடியே எண்பத்து நான்கு இலட்சம்) திட்ட செலவில் 54 வகையான மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருத்துவ தளவாடங்கள் மற்றும் குழந்தைகள் நலமேம்பாட்டிற்காக ரூபாய் 6,29,000/- (ரூபாய் ஆறு இலட்சத்து இருபத்து ஒன்பதாயிரம்) மதிப்பீட்டு செலவில் கடந்த 2025ம் ஆண்டு சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளி யிடப்பட்டு தற்போது கட்டப்பட்டுள்ள தாய்பாலுட்டும் மேலாண்மை அறையும் திறந்து வைக்கப்பட்டது. குடியாத்தம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை யில் உள்ள பிரிவுகள் தமிழ்நாடு விபத்து மற்றும் அவசரசிகிச்சைப்பிரிவு (TAEI), வெளிநோயாளிகள் பிரிவு, உள்நோயாளி கள் பிரிவு, குழந்தைகள் நலப்பிரிவு, பச்சிளங்குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவு, பிரசவப்பிரிவு, குடும்பநலப்பிரிவு, ஆண்கள் மற்றும் பெண்கள் பொது மருத்துவம் மற்றும் அறுவைசிகிச்சைப் பிரிவு, சிறுநீரக சுத்திகரிப்பு பிரிவு, தீப்புண் சிகிச்சை பிரிவு, முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டம் (CMCHIS), மாவட்ட மனநலமையம், காசநோய் பிரிவு, தேசிய சுகாதாரத் திட்டங்கள், உணவு மற்றும் ஊட்டச்சத்து வழங்கும் பிரிவு, மருந்தகம், ஆய்வகபரிசோதனைகள் பிரிவு, கதிரியக்கப் பிரிவு (X-Ray. USG, CT Scan), இரத்தவங்கி, பல்மருத்துப்பிரிவு, அறுவை அரங்கங்கள் (பொது அறுவை சிகிச்சை, பிரசவ மற்றும் குடும்பநல அறுவை சிகிச்சை, காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை, அவசர அறுவை சிகிச்சை), மருத்துவப் பதிவேடுகள் பிரிவு ஆகிய பிரிவுகள் உள்ளன. இந்நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை  அரசு கூடுதல் தலைமை செயலாளர் முனைவர் பி.செந்தில்குமார், இ.ஆ.ப., வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர்  வே.இரா. சுப்புலெட்சுமி, இ.ஆ.ப.,  வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம். கதிர் ஆனந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் .ஏ.பி.நந்தகுமார் (அணைக்கட்டு), ப.கார்த்திகேயன்(வேலூர்), வி.அமுலு விஜயன்(குடியாத்தம்), வேலூர் மாந கராட்சி மேயர்  சுஜாதா ஆனந்த குமார், மருத்துவம் (ம) ஊரக நலப்பணிகள் இயக்குநர் மரு.கே.சித்ரா,  குடியாத்தம் நகர்மன்றத்தலைவர் எஸ்.சௌந்தர ராஜன், குடியாத்தம்  ஒன்றியக்குழுத் தலைவர் .நு.எ.சத்தியானந்தம், மருத்துவம் (ம) ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் மரு.பி.சிவக்குமார், குடியாத்தம் அரசு  தலைமை மருத்து வமனை இரத்த மைய அலுவலர் மரு.ஆக்னஸ்  பியூலா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad